Friday 18 November 2016

முதுகுளத்தூர் தூரி M.R.இராமசாமித் தேவர் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க கோரிக்கை

பரமக்குடி நவ.18, இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சேவகராகவும் வாழ்ந்து மறைந்த பெரியவர் தூரி இராமசாமித் தேவர் அவர்களின் பிறந்த நாளில் அரசு விழா எடுக்கவும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்திடவும் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு 17.11.16 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் இந்திய நாடு ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்திற்கு கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது சுதந்திர உணர்வோடு போராடி – விடுதலை அடைந்திட பல போராட்டங்களையும், உயிர்த் தியாகங்களையும் அதிகஅளவில் நடத்தியதோடு, சிறை வாழ்வையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இதனை தாங்கள் பல முறை தங்களது சுதந்திர தின உரைகளில் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தைச் சார்ந்த எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்கள் இந்திய சுதந்திர உணர்வோடு பலமுறை ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டு சிறை சென்று இருந்துள்ளார்.

தெய்வத்திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களோடு சேர்ந்து நாட்டின் விடுதலைக்காக பலமுறை சிறை சென்றதோடு, தேவரைப் போலவே தமது வாழ்வையும் திருமணம் செய்யாமலேயே நாட்டிற்காக அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார். வேலூர் மத்திய சிறை, பெல்லாரி மத்திய சிறை – ஆந்திரா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறைகளில் கைதியாக இருந்த இவரது தியாகத்தைப் போற்றும் விதமாக, இந்தியாவின் 25 வது சுதந்திரதின விழாவின் போது, அன்றைய பிரதம அமைச்சர் திருமதி. இந்திரா காந்தி அவர்கள் 15.08.1972 அன்று மத்திய அரசின் சார்பில் சிறந்த சுதந்திரப் போராட தியாகி என தாமிர பத்திரம் வழங்கி கெளரவித்துள்ளார்.

தேவர் திருமகனாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது மறைவுக்குப் பிறகு தமது 49 வது வயதில் திருமணம் செய்தவரான இவரது நாட்டுப்பற்றிற்கு சான்றாக தேவர் திருமகனார் தமது சொத்துகளில் ஒரு பாகத்தை இவரது பெயருக்கு எழுதி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவியான இரா.பூமயில் அவர்கள் தற்போது மத்திய / மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெற்று வருகிறார். கடந்த 1989 ஆம் வருடம் ஆகஸ்ட் 05 அன்று திரு.இராமசாமித்தேவர் அவர்கள் மரணம் அடைந்து விட்டார். அவரது தியாக உடல் அவரது சொந்த கிராமமான முதுகுளத்தூர் வட்டம், மு.தூரி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு, அவரது பிறந்த மற்றும் இறந்த நாட்களில் கிராம மக்களால் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டுமென அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆகவே, உண்மைத்தியாகிகளின் வாழ்விற்கு அங்கீகாரமும் – மரியாதையும் செலுத்துவதில் பெரும் முனைப்போடு செயல்படும் தங்களது தலைமையிலான தமிழக அரசின் சார்பில் தியாகி, தூரி எம்.ஆர்.இராமசாமித்தேவர் அவர்களின் நாட்டுப்பற்றையும், தியாக்கத்தையும் போற்றும் விதத்தில்  இவரது பிறந்த நாளில் (30.09.1914) அரசு விழா எடுத்திடவும், அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்திடவும் ஆவண செய்திடுமாறு தங்களை மறத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பாகவும், முதுகுளத்தூர் வட்டார கிராம பொதுமக்கள் சார்பாகவும் பணிவோடு வேண்டுகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.


Monday 6 June 2016

புதுமலர் பிரபாகரன் புகைப்படம்

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத் தொகுப்பு.

Thursday 2 June 2016

sivagangai 2nd Rajah — Muthu Vaduganatha Peria Oodaya Thevar (1750–1772)

கெளரி வல்லப முத்துவடுகநாத ராஜா என்னும் மாமன்னர் முத்துவடுகநாதப் பெரிய உடையாத்தேவர் அவர்களின் வீரம் செறிந்த வரலாற்றினை தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும். சின்ன மறவர் நாடாம் சிவகங்கை சீமையை அரசாட்சி செய்த இரண்டாம் மன்னர் ஆவார். அவரது நினைவேந்தல் விழா ஜூன்-25 அன்று காளையார்கோவில் மாலையீட்டில் நடைபெற உள்ளது. 

அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்.

Monday 8 August 2011

கள்ளர் kallar



வணக்கம் சொந்தங்களே

கள்ளர் என்ற ஓர் இனமுண்டு. களங்கமற்ற இனமென்ற பெயரும் உண்டு. கங்கை முதல் கடாரம் வரை அறியணை ஏறிய முகவரியும் உண்டு. கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாரும் உண்டு. கல்லணை கட்டியும் மைந்தன் மேல் தேரோட்டி நீதியை வணங்கியும் புவியில் பெருங்கோயில் அமைத்து, ஔவையின் வரப்புயர பா மாலையும் ரசித்து இரு ஆயிரம் பட்டங்களையும் சுமந்து பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது. காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது. கள்ளர் பெருமை கொள்வொம். களம் காண்போம். கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள்.
கள்ளர் இனம் பழம் பெருமை பேசுவதென்பதும், கள்ளர் பழமையைப் போற்றுவதென்பதும், கள்ளர் இன பரம்பரை புகழைப் பாராட்டிப் பறப்புவதென்பதும் கள்ளர் குல பண்பாடு, அது ஒரு கலாச்சாரம், அது ஒரு வரலாற்று பெருமை. பழம் பெருமை பேசாத கள்ளர் எவரும் தன் மூத்தோர், முன்னொர் புகழ் பாடாத கள்ளர் எவரும் தன்னைப் பற்றி கள்ளர் இனம் பெருமையாக பேசும்படியான எந்தச் செயலையும் செய்து விட முடியாது.
தீர்வு காணத் தெரியாதவர்கள் தீர்ப்பு கோரி புலம்பாதீர்கள். தீர்வு காணும் முயற்சிகளின் எண்ணிக்கயை அதிகமாக்குங்கள். முயற்சிகளின் ஆற்றலுக்கு எல்லை இல்லை. முயற்சி தான் தன்மானத்தின் உச்ச நிலை என்பதனை நீங்கள் உணரும்போது தீர்வு தானாக உங்களை நாடி வரும். இல்லை எனில், அநியாயமாக ஒருவரை நீதிபதி ஆக்கிவிட்ட அவமானம் உங்களைக் குடையும்
ஆண்ட பரம்பரை அடிமைப் படலாமா? வந்த பாதையை நாம் மறந்து விட்டால் போகும் பாதை நமக்கு புரியாமல் போய்விடும்.
கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள். இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவொம். வாருங்கள்! 

கள்ளர், மறவர், அகமுடையார்



சென்னை, அக். 30: வாழும் இடத்திலேயே ஜாதிச் சான்றிதழ் பெற்றுக் கொள்வது தொடர்பான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், எந்தெந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பயன் பெறுவார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அரசின் உத்தரவின் விவரம்: முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகமுடையார் வகுப்புகளில் கள்ளர் வகுப்பும், அதன் உட்பிரிவான ஈசநாட்டு கள்ளர் வகுப்பும் தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளர் வகுப்பின் மற்ற உட்பிரிவுகளான கந்தர்வ கோட்டை கள்ளர்,

கள்ளர் kallar


கள்ளர்

கள்ளர் என்றொரு இனமுண்டு, அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு, நன்றி மறவாதவர்கள். கொடுத்த வாக்கினை காப்பாற்றுபவர்கள்.
முதன்முதலில் தென்னிந்தியாவில் குடியேறிய பழங்குடியினர். சோழ மன்னர்கள் வழிவந்தோர். எனவே கள்ளர் இனத்தவர் ஆட்சி பொறுப்பிலும், போர்ப்படையிளும், சோழ மன்னர்களுக்கு பணிபுரிந்தவர்கள்.